Friday, April 29, 2016

உன் சித்திரம்

தேடும் போது நீ அருகில்
தொடும் போது நீ தொலைவில்

நெஞ்சோடு வர்ணம்
விழியில் உன் சித்திரம்


Sunday, April 24, 2016

அனல் காற்றே

என்னை நொறுக்கும் அனல் காற்றே
என்னை வஞ்சிப்பதால் என்ன பயன்

ஒரு கையில் விஷமும்
மறு கையில் அமுதும்
ஏந்தி நிற்கிறாய்
இரண்டையுமே
எனக்கு தந்துவிட
மறுக்கிறாய்

கடும் வெப்பத்தால்
என்னை சுட்டெரிக்கிறாய்

உன் கொபகனைகளை
சற்று குறைத்துகொள்

நான் உனக்கு செய்த
தீங்கு என்ன ?



Friday, April 22, 2016

இறுதி அத்தியாயம்

வாழ்க்கையை
எப்படியாவது
நல்ல படியாக தொடங்கி விட வேண்டும்
என்ற விடா முயற்சியில்
எங்கோ ஓரிடத்தில்
எனக்கு தெரியாமலே
எனக்கான
இறுதி
அத்தியாயத்தையும்
எழுதி கொண்டு இருக்கிறேன்




Monday, April 18, 2016

நான் கனவுகள்

கதை சொல்பவனும் நான்தான்
கதையின் நாயகனும் நான்தான்
கதையும் நான்தான்

அதேபோல்

கனவு காண்பவனும் நான்தான்
கனவின் நாயகனும் நான்தான்
கனவும் நான்தான்

நான் கனவுகள்


Thursday, April 14, 2016

கொஞ்சம் பிடிக்காது

அவளுக்கு என்னை
கொஞ்சம் கூட
பிடிக்காது

அவளை எனக்கு
கொஞ்சம்தான்
பிடிக்காது

-------------------------------------------------------------------------
கொஞ்சம் கெஞ்சி குலாவினால்
கொஞ்சமாச்சும் என்னை பிடித்துவிடாதா
என்ற நப்பாசையில்
அவளை விட்டு பிடித்து பார்க்கிறேன்.

காதல் கடி

நீ என்னை
உண்மையாக காதலிக்கிறாயா ?
என்றாள்
ஆம் என்றேன்
இல்லை என்றாள்
நீ சொன்னால் சரிதான் என்றேன்

கன்னத்தை கடித்துவிட்டாள்
காதலிதானே கடித்தாள் என்று
பொறுத்து கொண்டேன்

அவள் கடினால்
அவள்மேல்
என் காதல்
குறைந்து விட போவதில்லை
கூடி கொண்டே போகிறது
காதலாக



Wednesday, April 13, 2016

பணத்தின் சொல்லாடல்

மனித நேயத்துக்கும்
மனித தேவைக்கும்
இடையே
பணம் என்ற சொல்
சொல்லாடல் செய்கிறது              (தருக்கம்)


விவசாய கடன் தள்ளுபடி

ஊக்க தொகையாக                          (அன்பளிப்பாக)
கொடுக்கப்பட்டிருந்தால்
விவசாய கடன்
தள்ளுபடி
என்ற பேச்சுக்கே
இடம் இருக்காது


Friday, April 8, 2016

என் உயிர் தோட்டாவில்

எனது உயிர்
என் எதிரியீன்
கைகளில் உள்ள
துப்பாக்கி தோட்டாவில்
அடமானம்
வைத்துவிட்டு  தான்
வந்திருக்கிறேன்

நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
புராட்சியீன் விதை முளைக்கும்
விடுதலையின் ஓசை தொனிக்கும்
புது  பாதைகள்  பிறக்கும்
அமைதியின் மலர் பூக்கும்



Thursday, April 7, 2016

நீ ஏன் வந்தாய்

நீ ஏன் வந்தாய்
மீண்டும் என் வாழ்வில்

வேண்டாம் என்றுதானே சென்றாய்
பிறகு ஏன் மீண்டும் வந்தாய்

நான் உயிருடன் இருப்பது
உனக்கு பிடிக்க வில்லையா ?

நீ ஏன் வந்தாய்
மீண்டும் என் வாழ்வில்


ஒரு கனவு

கால்கள் இல்லை
ஒடுவது போலவும்
சிறகுகள் இல்லை
பறப்பது போலவும்

ஒரு கனவு

இறுதியில் ஒரு தேவதை
இறுக்கி அனைத்து ஒரு முத்தம் தந்தாள்

கனவு கலைந்தது