Saturday, December 31, 2016

பிறப்பா இறப்பா ?

இந்த உலகில் மீண்டும்
நமது பிறப்போ மரணமோ
நிகழ போவதில்லை
அது தெரிந்தும்
நாம் மீண்டும் புதிதாய் பிறக்க முயல்கிறோம்
 முடியாத போது மரணித்து பார்க்கிறோம்
புதிய உலகில் புதிய பிறப்பை தேடி செல்கிறோம்
அப்படி அங்கு மீண்டும் பிறப்போமா ? இலையா ?
என்பது நமக்கு தெரியாது
அது தெரிந்தால்
நமக்கு இங்கு இனி வேலைகள் ஏது .


Friday, December 30, 2016

தனிமையில் காமம்

காமம் கொள்ளா நிலை
ஏக்கத்தை தூண்டுகிறது
ஏனோ இந்த விரத நிலை
தனிமையில் தொடர்கிறது

காமம் தனிமையில் வாடி
வெகு தூரம் பயணமாகிறது

காமம் அற்ற உடலாய்
காதல் அற்ற நிழலாய்
காலத்தால் கரைகிறது
வாழ்க்கை


Tuesday, December 27, 2016

காதலி இல்லை

என் காதலி இன்னும் பிறக்கவே இல்லை
அவள் கருவிலே கள்ளிப்பால் குடித்துவிட்டாள்
அவள் தாய்மொழி இல்லாதவள்
தலையெழுத்தும் இல்லாதவள்
ஒருவேளை அவள் தப்பித்து பிறந்திருந்தால்
இந்நேரம் என்னை அவள் சந்தித்து இருப்பாள்
நான் கூட எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்
என்று நம்பி இருப்பேன்
உண்மையில்
அவள் தப்பிக்கவுமில்லை
பிழைக்கவுமில்லை
அவளை நான் இன்னும் சந்திக்கவுமில்லை
ஆகவே எனக்கு
காதலி என்பவளே இல்லை


Thursday, December 22, 2016

எச்சரிக்கை ஒதுங்கிவிடுங்கள்

தந்திர மாயக்காரர்கள்
சூனியக்காரர்களை கடந்து
புண்ணிய ஸ்தலங்களை எழுப்பி
குப்பைகளில் படுத்துறங்கி
சாக்கடைகளை பருகி
வந்திருக்கிறேன்

நீங்கள் காட்டும்
மோடிமஸ்தான் வேலைகள் எல்லாம்
என்னிடம் பலிக்காது

மேம்போக்கான பார்வையிலே
உங்களை
சூரசம்காரம் செய்துவிடுவேன்

நான் களத்தில் நிற்கிறேன்
எச்சரிக்கை மணி ஒலிக்கும்போதே
உயிர் பிட்சை போடுகிறேன்
ஒதுங்கிவிடுங்கள் அல்லது
ஓடிவிடுங்கள்


முதலிரவு

ஆம் முதலிரவுதான்
இங்கே யார் முதலில் ஆடையை அவிழ்ப்பது
என்பதில் ஒரு சின்ன சந்தேகம்.
இருந்தாலும் அவிழ்த்துதானே ஆக வேண்டும்
என்கிற எண்ணமும் பின்னிருந்து
ஆசைகளை முன்னுக்கு தள்ளுகிறது

போதும் போதும்
உங்கள் மேல் மூச்சை
கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
நான் இதற்க்கு மேல்
சொல்ல விரும்பவில்லை



Monday, December 19, 2016

சிவப்புக் கோடு

இந்த கோட்டுக்கு கீழே தாழ்ச்சி
இந்த கொடுக்கு மேலே புகழ்ச்சி
இடையே தடை போடும் சூழ்ச்சி

மேலே இருந்து வீசப்படும்
ரொட்டி துண்டுக்காக
கீழே காத்து கிடக்குது
அடிமையின் கூட்டம்

கீழ் உள்ளவர் உழைப்பை சுரண்டி
மேலே வாழ துடிக்குது வஞ்சக கூட்டம்

இடையில் உரிமை குரல் கொடுக்குது
சிவப்பு கூட்டம்

சிவப்புக் கோடு
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மான உரிமைக் கோடு

மேலே உள்ளவன் விட்டுக்கொடுத்து
இறக்கம் கொண்டு
கீழே வருவதும் கடினம்

கீழே உள்ளவன் முட்டிமோதி
எட்டி பிடித்து
மேலே செல்வதும் கடினம்

இந்த கடின கோட்பாட்டை
அழிக்கப் பிறந்ததே
இந்த முயற்சி
சிவப்பின் முயற்சி

மனிதத்தில் தாழ்ச்சி என்பதே இல்லை
இங்கு அனைவரும் சமம்
இந்த கோட்பாட்டின் உரிமையை பெறுவதே
இந்த சிவப்பின் லட்சியம்

Saturday, December 17, 2016

செல்ல குட்டியின் முத்தம்

அன்புள்ள அம்மா
அன்புள்ள அப்பா
அம்மாவுக்கு முத்தம்
அப்பாவுக்கு முத்தம்
இருவருக்கும் இந்த
அன்பின் முத்தம்

முத்தின் முத்தம்
முத்தத்தின் முத்தம்
இந்த செல்ல குட்டியின் முத்தம்

அன்புள்ள
அம்மா அப்பாவிற்கு
என் முத்தம்


Tuesday, December 13, 2016

நான் சிறந்த நடிகன்

நான் சிறந்த நடிகன்
என் நாடகங்களுக்கு
முன் பயிற்சியே கிடையாது
நேரடி காட்சி தான்
மிகவும்
அப்பட்டமாகவும்
எதார்த்தமாகவும்
குழப்பங்களை
சாமாளிக்க தெரிந்ததாகவும்
தோல்விகளையும் இடர்பாடுகளையும்
கதை கருவாகவும்
கதையின் களமாகவும்
இருக்கும்
இறுதியில் கைதட்டல்களுடன்
கதை என் போக்கிலே பயணித்து
சிறப்புடன்  மகிழ்ச்சியுடன்
பாராட்டுகளுடன்
நிறைவுபெறும்


Monday, December 12, 2016

நானும் கடவுளாகிறேன்

நான் நன்றாக வாழ்ந்த போது
என்னை சுற்றி நின்று வாழ்த்தியவர்கள்
நான் சற்றே தாழ்ந்த போது
என்னை தூற்றி கொன்று வீழ்த்தினார்கள்

என்னை கட்டிலுக்கு
கரம் பிடித்து இழுத்தவர்கள் கூட
என்னை யார் என்றே தெரியாது என்றார்கள்

ஒரு சமையம்
நான் தாழ்ந்து இருந்தேன்
அதற்க்கு முன்பு
நான் வாழ்ந்து இருந்தேன்

மீண்டும் யாரோ விட்டு சென்ற
கருணையால்
கிருபையால்
வாழ்கிறேன்

அனுபவங்களை சுமந்து
ஞான நிலையை கடந்து
கால ஓட்டத்தில்
நானும் கடவுளாகிறேன்


Friday, December 9, 2016

காதலற்றவள்

காரியத்தில் கண் வைத்து
காய் நகர்த்தும் மனம்
உடலையே விலையாக்க துணியும் குணம்
காதல் கண்களில் மட்டும் தான்
மனதினில் இல்லை
என்பதனை வெளிக்காட்டாத
கச்சித நடிப்பு
மேனி
அழகை கூட்டி
ஆசையை தூண்டி
அடிமைகளை அறுவடை செய்யும்

அவளுக்கும் ஆசைகள் இருந்தாலும்
ஆழ்மனதில் குடிகொண்ட ஆணவம்
அவளை காதலற்றவாளாக செய்துவிடும்
அனால் அவள் காமம் அற்றவள் கிடையாது.
அவள் வெறும் காதலற்றவள்..


காதலற்றவன்

கடமைகள் தலைக்கு
ஏறிய நிலையில்
முற்றிலும் காதலற்றவனாய்
ஆகி விட்டதை போல் ஒரு உணர்வு
இது உண்மை தானா
காதல் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா ?
சலிப்பாக போலி காதலிகளை தேடுகிறேன்
அவர்களிடம் உள்ள
அந்த காதல் உணர்வுகளை மட்டுமே
திருட விரும்பிகிறேன் .
அந்த காதலை பருகிய பின்
மீண்டும் காதலற்றவனாய் திரியவே விரும்புகிறேன்.


Friday, November 25, 2016

அன்பின் பரிசு

அன்பை காட்டி
முதுகில் குத்தி
ஏமாற்றியவர்களுக்கெல்லாம்
அன்பையே பரிசாக தந்துவிடுகிறேன்
வெறுப்பை ஒருபோது உமிழ்வதில்லை
என்கிற கொள்கையை
முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்

நான் வளர வளர
என்னை ஏமாற்றுபவர்களின்
எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது
அவர்கள் மீது என் அன்பும் பெருகிக்கொண்டே போகிறது.

ஒருவேளை
ஒருகட்டத்தில்
என்னால் அன்பின் பரிசை
அவர்களுக்கு தரமுடியாத
சூழல் வந்துவிடுமோ என்கிற
எண்ணமும் அடிக்கடி வருவதுண்டு .


அதுபோல் சுழல் நேரிடும்போது
அன்பை கடன் வாங்க நேரிடுகிறது
யாரோ என்மேல் உள்ள கருணையில்
அந்த அன்பை கடனாக
அவ்வவப்போது தந்துவிட்டு செல்கின்றனர்
அந்த அன்பையெல்லாம் சிறுகசிறுக சேர்த்துவைத்து
என்னை ஏமாற்றி
என்னிடம் அன்பின் துரோகம் செய்துவிட்டு
செல்போருக்கு
அவ்வவப்போது
அந்த அன்பை பரிசாக தந்துவிடுகிறேன்.
அன்பு தொடர்கிறது

ஏமாந்தவன் ஏமாற்றியவனுக்கே
அன்பை பரிசாக தருகிறான்
ஏமாற்றியவன் ஏமாந்தவனை
கோமாளியாக பார்க்கிறான்
சரியான ஏமாளி
என்றும் எண்ணுகிறான்
ஏமாந்தவனிடம் வாங்கிய
அன்பின் பரிசு
அவனுள் அப்படி ஒரு சிந்தனையை
தூண்டிவிட தொடங்கும்
அதை அவன் உணர்வதில்லை
அன்பின் பரிசுதான்
அவனுள் செலுத்தப்பட்ட
அன்பின் அம்பு என்று
அந்த அம்பு அமுதும் நஞ்சும் கலந்தது
அவன் திருந்தினால் அது அமுதை அவனுள் செலுத்தும்
அவன் மறுதலித்தால் அது நஞ்சை அவனுள் செலுத்தும்

அன்பின் பரிசு
விலை உயர்ந்தது அல்ல
விலை குறைந்ததும் அல்ல
அனால்
விலை மதிப்பில்லாதது
அதை தருபவனும் விலை மதிப்பில்லாதவன் தான்

அவனை காப்பது
அன்பின் கடமை



Tuesday, November 22, 2016

கடவுள் இருக்கிறார்

உண்டியலுக்கு அறங்காவலர் இருக்கிறர்,
கண் காது வாய் கை கால் உடல்களுக்கு சிற்பி இருக்கிறார்,
உயிருக்கு அர்ச்சகர் இருக்கிறார் ,
இவர்களை பிழைக்க வைக்க நாம் இருக்கிறோம் ... அவ்வளவுதான் .
ஆனால் கடவுள் உருவம் இல்லா மனதில் இருக்கிறார் மனிதத்தில் இருக்கிறார்.
அவரவர் நம்பிக்கையில் இருக்கிறார்.
இப்படி எதோ ஒரு வகையில்
நம்மோடு கடவுள் இருக்கிறார்
கடவுள் இல்லை என்கிற சொல்லிலும் கடவுள் இருக்கிறார்

கடவுள் இல்லை என்றாலே
அது ஒரு முடிவு இல்லை
அதுவே ஒரு தேடலின் தொடக்கம்
கடவுள் இல்லை என்று நிருபிக்க
தொடங்கும் தொடக்கம்
அது இன்னும் தொடக்க நிலையிலே தான் இருக்கிறது.
கடவுள் இல்லா திசையை தேடி கொண்டே தான் இருக்கிறது.

அந்த தேடலில் போலி கடவுள்களை
அது கண்டுபிடிக்கிறது
அதை போலி என்று அடையாள படுத்தி அழிக்கிறது

இப்படி நிஜ கடவுளை இல்லை என்று நிரூபிக்க
அது மேற்கொள்ளும் பயணம்
எதோ ஒரு உண்மையை
வெளிக்கொணரும் என்றே தோன்றுகிறது

கடவுள் இருக்கிறார் என்று
கோடி கோஷம் எழுந்தாலும்
கடவுள் இல்லை என்கிற
ஒரு சொல்
அதனுள் ஊடுருவி
கடவுளை பொய் செய்ய விரும்பும்
அந்த பொய்
நிஜத்தில்
எங்கோ கடவுள் இருக்கிறார்
என்கிற சிந்தனையை தூண்டி விடும்
நிஜ கடவுளை
தேட செய்து விடும்


Saturday, November 19, 2016

வெற்றியின் கொடி

என் மீது வீசப்பட்ட
கற்களில் இருந்து
என் கோட்டையை கட்டி இருக்கிறேன்
சந்தேகமிருந்தால் அதை சோதித்து பாருங்கள்
அதன் பலத்தை அதிலுள்ள
கற்களின் தரமே சொல்லும்
ஆகிலும் அதினால் உண்டான
காயங்களின் கதையை அது
ஒருபோதும் சொல்லாது

இங்கு
யாவரும் வரலாம்
இலகுவாக இளைப்பாறலாம்
அதன் பாதுகாப்பு அரணும்
அதில் வசிக்கும் மக்களின் மகிழ்வும்
உங்களை ஆச்சரியப்படுத்தும்

பாருங்கள் இதோ மேலே பாருங்கள்
கோட்டையின் மீது உயரத்தில்
வெற்றியின் சின்னமாய்
என் கொடிப்பறக்கிறது.



அறுத்து எரியும் காலம்

ஆர்வக் கோளாறு காரணமாக
ஆத்திரத்தில் ஆறே மாதத்தில்
அறுத்து எரியத் தயாராகி விடுகின்றனர்
இளம் வயது ஜோடிகள்.

ஆத்திரத்தை ஆறப்போட
பழகிகொள்ளாதவர்கள்
ஆணவத்தில் உறவை அழித்துகொள்கிறார்கள்.
ஆளை மாற்றி
புது ஆளைத் தேடுகிறார்கள்
அதே ஆணவத்தை
ஆழ்மனதில் சுமந்துகொண்டு.


Friday, November 18, 2016

அவளை மீண்டும் சந்திப்பேன்

அவளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை ஆனால்
அவளை பார்க்கும் முன்பே ஒரு உணர்வு வந்து விடும்
அவளை பார்க்கப்போகிறேன் என்று
அது எனக்கு சொல்லாமல் சொல்லிவிடும்

ஏன் இப்படி வருகிறது
அவளை ஏன் இப்படி
மீண்டும் மீண்டும் நினைவுட்டுகிறது
என்று தோன்றும்

பிறகு அப்படியல்லாம்
நடக்காது
இது வெறும் நினைவுதான்
என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்

ஆனால் அதை நான்
மறக்கும் வேளையில்
அந்த நிகழ்வு நடந்துவிடும்

ஆமாம் அவள் நிஜமாகவே வருவாள்
என் கண்கள் முன்னே
அது நிகழும்

அவள் ஓரக்கண்ணால் என்னை பார்த்து
வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டு
என்னை கடந்து செல்வாள்

ஏன் இப்படி நடந்தது
எப்படி இது நடந்தது
என்று நான் எனக்குள்ளே
அதிசயத்து கிடப்பேன்

அவள் வரவிருப்பாது
எப்படி எனக்கு முன்பே தெரியும்
என்று எனக்கு நானே கேள்வி எழுப்பிகொள்வேன்  

அவள் கடந்தபின்பும்
அவள் நினைவும்
அவள் சிரிப்பும்
அவளாக என்னுள் தங்கிவிடும் .
அவளுக்காக காத்திருக்கவும் செய்துவிடும்
அவளை மீண்டும் சந்திப்பேன் என்கிற சிந்தனையுடன்



Monday, November 14, 2016

கரம் சேரா காதல்

காசுக்காக காதலிக்கிறேன்
என்று அவள் நினைத்து விடுவாளோ
என்று விலகி இருந்தேன்

நம் கதை தெரிந்து
காதலிக்க மறுக்கிறானோ
என்று அவள் விலகி இருந்தாள்

எனக்கோ அவள் கதை பொருட்டல்ல
அவளுக்கோ காசு ஒரு பொருட்டல்ல

அப்படி இருந்தும்
தவறான புரிதலால்
அவளுக்கும் எனக்கும்
சிறு சிறு தயக்கம்

இருவரும்
இறுதிவரை
பேசிக்கொள்ளவே இல்லை

ஆகவே
எங்கள் காதல்
கண்களை தாண்டி
கரம் சேரவே இல்லை





Sunday, November 6, 2016

அடுப்படி கனவுகள்

விறகை கூட்டி
நெருப்பை மூட்டி
அடுப்பை பற்ற வைத்த பின்
தணலை குழல் மூலம் ஊதி
தக தகவென எரிய விட்டுகொண்டிருப்பாள்

பானையில் உலை கொதிக்கும் நேரத்தில்
கிண்ணத்தில் புளி கரைத்து கொண்டிருப்பாள்

வீட்டுக்கு வரும்போது கணவன் கண்டிப்பாக
அரிசி வாங்கி வாருவார் என்கிற மிகை நினைப்பில்
மிதந்து கொண்டிருப்பாள்

கடைசியில்
கருகிய விறகுகள்
கரும் புகையால்
அவள் கனவுகளை கலைத்து
அவள் கண்களில் நீர் வடிய செய்து கொண்டிருக்கும்


Saturday, November 5, 2016

ஒட்டிய புத்தகம்

என் வாழ்க்கை
சில சம்பவங்கள் நிறைந்த கிழிந்த காகிதங்கள் தான்
அதை நான் அவ்வப்போது தேடி தேடி ஒன்றாக ஒட்டி வருகிறேன்
இறுதியாக ஒரு முழு புத்தகத்தை வடித்துவிடுவேன்
என்கிற நம்பிக்கையில்



Thursday, November 3, 2016

வாய்பூட்டு

வாயை மூடி இருந்தால்
கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் பறிபோகும்
வாயை திறந்து சத்தமாய் கேட்டால்
இருக்க வேண்டிய சில மிச்சங்களும் பறிபோகும்
அப்படியேன்றால் என்ன செய்வது ?
நேரம் காலம் சூழல் புரிந்து
கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பதும்
மவுனிக்க வேண்டிய நேரத்தில் மவுனிப்பதும்
வாய்மை தவறாமல் இருப்பதும்
வாய்ஜாலத்துக்கு மதிமயங்காமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் சூழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் முகம் கோணாமல் நடப்பதற்க்கும்
வாய்க்கு ஒரு பூட்டு போடுவது சாலசிறந்தது




Sunday, October 30, 2016

தெளிந்த பிரதிபலிப்பு

தெளிந்த நீரோடை போல் இருக்கும்
என் உள்ளம் பார்த்தும்
அவளுக்கும் தெரியவில்லை ...
அவள் முகத்தின் பிரதிபலிப்பை தவிர
வேறொன்றும் இல்லையென்று .



Thursday, October 27, 2016

சாதனை படைத்தேன்

கொடுக்க காத்திருந்த
முத்தங்களை தொலைத்தேன்
கை பிடித்து இழுத்த
காமத்தை தொலைத்தேன்
இதயத்தின்னுள் புகுந்த
காதல்களை தொலைத்தேன்
தோள்கொடுத்த
தோழமைகளை தொலைத்தேன்
தேடி வரும்
தூக்கங்களை தொலைத்தேன்

என்னை வதைத்தேன்
அயராது உழைத்தேன்

பலன்களை எதிர்பாராததால்
என்னையே தொலைத்தேன்

தொலைந்த இடத்தில்     (தடத்தில்)
சாதனைகள் படைத்தேன்




Wednesday, October 26, 2016

வேதமும் எதிர்மறையும்

வேதங்களுக்கு எப்பொழுதும் எதிர்மறைகள் உண்டு
எதிர்மறைகள் வரும் என்று அறிந்தே தான்
அதற்க்கேற்றார்போல்
வேதங்கள் முன்கூட்டியே சரிவர
திட்டமிட்டு எழுதப்பட்டு இருக்கிறது.
வேதங்களை முழுவதும் ஆராய்ந்து அறியாமல்
வெளியே இருந்துகொண்டு
ஒரு வரியை மட்டும் பிடித்துகொண்டு
குறை கூறுவது அபத்தம்


பறிகொடுத்த வாழ்வு

என் இழப்பை எல்லாம்
அவள் சரிகட்டுவாள்
என்றிருந்தது தவறு

அப்படி இருந்த படியால்
என்னுள் மீதம் இருந்ததையும்
அவள்
பறித்து சென்றுவிட்டாள்

பறிகொடுத்ததை
மீட்க சென்ற போதுதான்
தெரிந்தது
ஏற்க்கனவே என்னைப்போல்
பறிகொடுத்தவர்கள்
வரிசையில்
நானும்
ஒருவன் என்று


கற்பூர காம ராஜாக்கள்

 முன்பு இணைய தளங்களில்
தேடி தேடி
காம கதைகள்
வாசித்தவர்கள் தான்
இன்று
சமுகவளைதலங்களில்
பக்தியின் மார்க்கம்
நெறியாளர்களை போல்
கற்பூர தீபம் ஏற்றுகிறார்கள்

இது யாரை
காமத்தில் கவுக்க
அவர்கள் போடும்
வேஷம் என்று

தெரியவில்லை


அகங்கார சோதனை

முதலில் கெஞ்சி பார்த்தாள்
பிறகு கொஞ்சி பார்த்தாள்
அதன் பிறகு பழகி பார்த்தாள்
பிறகு அதிகாரம்  செய்து பார்த்தாள்
அதன் பிறகு ஆணவம் கொண்டு பார்த்தாள்

இது வழக்கமாக பெண்கள்
கையாளும் யுக்தி என்பதால்
நான் எதற்கும் அசரவில்லை
ஒரே  நிலையில் தான்  இருந்தேன்
சொல்லபோனால்
இன்னும் அதிகமாக
அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்
ஆனால் அவளால்
இந்த சிறு சோதனைகளையே
தாக்குபிடிக்க முடியவில்லை

பிறகு என்னை வெறுத்து பார்த்தாள்
பதிலுக்கு நானும் வெறுத்துவிட்டேன்

காரணம்
அவளிடம்
சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வந்த காதலே
இருந்ததே தவிற
உண்மையான காதல் இல்லை
என்று முடிவில் தெரிந்து கொண்டேன்

இருந்த போதும்
நான் அவளை காதலிக்கவில்லை
என்று அர்த்தமில்லை
அவளை
மனதார காதலித்தேன்
ஆகவே சோதித்தேன்

சோதிப்பது தவறு  இல்லை
சோதித்த பின் தான் தெரிந்தது
நான் சோதித்தது
தவறாக போகவில்லை என்று

பல பாடுகள் கடந்து
உடைந்து மெலிந்து

அவள் தற்பொழுது
என்னை காதலிக்கிறாள்
என்னை தாண்டி காதலிக்கிறாள்






Saturday, October 22, 2016

வார இதழ் கவி விற்ப்பவன்

வாரா அன்புகளை எல்லாம் கட்டி இழுத்து
கவலைகளை எல்லாம் கவிதைகளாக வடித்து
வார ஏடுகளின் காகிதங்களில் வார்த்தெடுத்து
விற்ப்பனைக்கு அனுப்பிய பின்
அதை எழுதியவனே
வாரம் தோறும் ஏலம் போல் கூவி கூவி விற்கிறான்
அதில் என்ன இருக்குமோ என
வாஞ்சையில் வாங்கியவர்கள்
அதன் வாசத்தை நுகர்ந்துவிட்டு
( அதில் அடித்த பழைய புடவையின் வாசத்தை கண்டுகொண்ட பின் )
வேண்டா வெறுப்பாய் அதை பரணின்மேல்
தூக்கி எறிகிறார்கள்
நானும் படித்தேன்
தாங்கள் வடித்த கவிதைகளை
என பெருமையாக
போடிப்போட்டுக் கொண்டு
அதை எழுதிவனுக்கு
பாராட்டுகளால்
பதில் எழுதி
பெருமை சேர்கிறார்கள்.
அவனும் அதை
ஒரு உந்துதலாக கருதி
உற்சாகமாய்
தொடர்ந்து அதேபோல்
வாரம் வாரம்
எழுத்துகளால் எழுதி
நம்மை சாகடிக்கிறான்


Thursday, October 20, 2016

உன்னை காண வருகிறேன்

மலரே சிறு மலரே
உன்னை காண வருகிறேன்

புருவங்கள் மத்தியில்
வட்டமிடும் காய்ந்த நிலவுகளுக்கு துணையாக
நெற்றிச் சுட்டி செய்து வருகிறேன்

வெறும் கழுத்துக்கு
கொத்து கொடி தாலிக்கொடியால்
மாலைகள் செய்து வருகிறேன்

கந்தல் உடை மறைத்த கைகளுக்கு
கொந்திக்காய் பூ காப்பு
மோதிரம் செய்து வருகிறேன்

உளை ஊனிய கால்களுக்கு
அத்திக்காய்க் ஆலங்காய்க் கொலுசும்
 தாழ் மெட்டியும் செய்து வருகிறேன்
 

வந்து
என்  அரைஞாண் கயிட்றை
உன் கரம் இழுத்து பிடிக்க செய்து
உன் வெட்கிய முகம் பார்த்து
என் காதலை சொல்ல போகிறேன்





Wednesday, October 19, 2016

பண்டிகை

பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகிறது
பண்டிகைகள் ஒரு மகிழ்ச்சியின் வெளிபாடு
அப் பண்டிகையின் நோக்கம் எதுவாகிலும்
அதில் ஒரு ஆனந்தம் நிறைந்திருக்கும்

பசித்த வெறுத்த கண்களுடன்
பார்க்கும் ஏழைகளுக்கு அது
ஏக்கம் நிறைந்ததாய் இருக்கும்

இந்நிலை மாறட்டும்

இருப்போர் இல்லாதோருக்கு பண்டிகைகளில்
அன்பாய் பரிசுப்பொருட்களை தரட்டும்

பண்டிகை என்பது பகிர்தல்
மகிழ்ச்சியை பகிர்தலாக இருக்கட்டும்


Tuesday, October 18, 2016

காதல் பிரிவு

தீராது காதல் தாகம்
தீயில் வேகுது
திமிர் கொண்ட தேகம்

என்னை இழந்து
உன்னை சுமந்து செல்கிறேன்  (நிற்கிறேன்)
(அல்லது)
(என்னை உன்னிடமிழந்து, உன்னை என்னுள் சுமந்து செல்கிறேன் )

நரக வேதனையில்
நகரும் நேரங்கள் மனதை நொறுக்குகிறது     (நோருக்குதே)



முன்பு நெஞ்சில் (இதயத்தில்) இதழால் பச்சை குத்திய நினைவுகள்
பின்பு பிச்சை கேட்டு அதை கத்தியால் கீறி அழிக்குதே (குதறி தள்ளுதே)
என்ன செய்வேன் என்னை என்ன செய்வேன்
காதல் (காதலே) என்னை கொல்லுதே என்ன செய்வேன்   (ஆண்)



உன்னை ஏன் பார்த்தேன் ,
பார்த்ததும் என்னை ஏன் துலைத்தேன்
ஏனோ ஏனோ தெரியவில்லை
இன்று நான் படும் வேதனைகள்
உனக்கு ஏன் புரியவில்லை   (ஆண்)

காதலில் சிறு பிரிவு என்பதே
மீண்டும் சேர்வதற்காக தானே
காத்திருந்தால் தெரியும்
இந்த அன்பின் வலி புரியும்  (பெண்)



( நிஜத்தில்
ஆரா காதல் காயம் செய்து
கனவில் வந்து
மயில் இறகால்
மருந்தை தடவுவது ஏனோ )  (ஆண்)

பூவை விட்டு விழுந்த இதழ்கள்
மீண்டும் இணைவதில்லை  (ஆண்)

காற்றில் ஒடிந்த கிளைகள்
மீண்டும் துளிர்ப்பதில்லையா   (பெண்)



வேண்டாம் இந்த காதல் வேண்டாம்
வேதனையில் வேள்வி செய்யும் இந்த நிலை வேண்டாம்  (ஆண்)


வாடை காற்றே
உனக்கு புரியவில்லையா

நானும் நொடிவது
உனக்கு தெரியவில்லையா  (பெண்)

காத்திருக்கிறேன்
காலம் கரையும் வரை
காத்திருக்க வைக்கிறேன்

காதல் கண்ணீரில் கரையாமலிருக்க
காலமெல்லாம்
காத்து நிற்கிறேன்       (பெண்)



Sunday, October 16, 2016

சிநேக சன்மானங்கள்

நட்பில் சன்மானமாக கிடைத்த
முதல் காதலி
காதலில் சன்மானமாக கிடைத்த
முதல் முத்தம்
காமத்தில் சன்மானமாக தழுவிய
முதல் உடல்
உறவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிரிவு
பகையால் சன்மானமாக கிடைத்த
முதல் சண்டை
வெறுப்பால் சன்மானமாக கிடைத்த
முதல் துறவு
தனிமையால் சன்மானமாக கிடைத்த
முதல் நட்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அம்மாவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிறப்பு
பிறப்பால் சன்மானமாக கிடைத்த
முதல் வாழ்வு
வாழ்வில் சன்மானமாக கிடைத்த
முதல் நட்பு
நட்பால் சன்மானமாக கிடைத்த
முதல் காதல்
காதலால் சன்மானமாக கிடைத்த
முதல் காமம்
காமத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் உறவு
உறவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிரிவு
பிரிவால் சன்மானமாக கிடைத்த
முதல் பகை
பகையால் சன்மானமாக கிடைத்த
முதல் சண்டை
சண்டையால்  சன்மானமாக கிடைத்த
முதல்  துறவு
துறவால் சன்மானமாக கிடைத்த
முதல் தனிமை
தனிமையால் சன்மானமாக கிடைத்த
முதல் அமைதி
அமைதியால் சன்மானமாக கிடைத்த
முதல் ஞானம்
ஞானத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் வேதம்
வேதத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் அருள்
அருளால் சன்மானமாக கிடைத்த
முதல் ஆராதனை
ஆராதனையால் சன்மானமாக கிடைத்த
முதல் சாதனை
சாதனையால் சன்மானமாக கிடைத்த
முதல் சரித்திரம்
சரித்திரத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் சாம்ராஜ்ஜியம்
சாம்ராஜ்ஜியத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் செங்கோல்
செங்கோலால் சன்மானமாக கிடைத்த
முதல் போர்
போரால் சன்மானமாக கிடைத்த
முதல் காயம்
காயத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் முதல் மரணம்


விட்டுவிடா விட்டு

இடைப்பட்ட காலத்தில்
ஒரு விட்டு ஒன்று சொல்ல முயல்கிறேன்
சட்டென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை
ஆகையால் அந்த எண்ணத்தை விட்டுவிட்டு
வேறு ஏதாவது சொல்ல யோசிக்கிறேன்
சட்டுபுட்டு என ஒரு விட்டுக்கூட
தட்டுப்படாவில்லையே
என்று விட்டுவிட்ட எண்ணம்
மீண்டும் என்னை விட்டுவிடாமல் விரட்டுகிறது
விட்டை விட்ட இடத்திலிருந்து
மீண்டும் விட்டுவிடாமல் பிடிக்கிறேன்
விட்டு நினைவில் மீண்டும் வருமென்றும்
விட்டுவிடா விட்டை
எப்பாற்பட்டாவது சொல்லியே ஆகவேண்டும் என்றும்
விட்டை அவிழ்க்கிறேன்
-----------------------------------------------

(விட்டு - காமெடி,ஜோக்)


Thursday, October 13, 2016

வேஷக்காரன் கிளியே

நான் வேஷக்காரன் கிளியே
இல்லை மோசக்காரன் கிளியே
கூட்டைத் தாண்டி வெளியே
நீ வந்தால் என்ன கிளியே

பூவோடு நார் சேருமே
என் தோளோடு நீ சாய்யம்மா (2)

Saturday, October 8, 2016

வாசல் இல்லா அறை

வாசல் இல்லாத அறை அது
யாரும் உள்ளே நுழையவும் முடியாது
உள்ளே இருப்பவரால் வெளியே வரவும் முடியாது


உள்ளே இருப்பவரை மீட்டெடுக்க
வெளியே இருப்பவர்கள்
உள்ளே நுழைய அறையின் வாசலை தேடுகிறார்கள்


வாசல் நுழைவில்லா அறைக்குள்
உள்ளே எப்படி ஒருவர் ஏற்கனவே சென்றிருக்க முடியும்
என்பதை சிந்தியாமல் தேடுகிறார்கள்
உள்ளே எவருமில்லை என்பதை எப்போது
இவர்கள் அறிவார்கள்



Sunday, October 2, 2016

காதலும் கத்திரிக்காய்யும்

அவளுக்கு என்மேல்  உண்டான  காதல் மட்டும்
உண்மை
ஆனால் அவள்  என்மேல் கொண்ட காதல் மட்டும்
பொய்

காதல் கொண்டவன் மேல்
உண்டான  காதலை
காமம் கொள்ளும் முன்
உண்மையும் பொய்யும்
பிரிந்து
பரிதவிப்பில் திண்டாட
தனிமையில் கொண்டாட
கத்திரிக்காய் அவளுக்கு
காதலானது


Thursday, September 29, 2016

போகும் நேரங்கள்

எனக்கு நேரம் போதவில்லை
எதை முந்தி செய்வது
எதை பிந்தி செய்வது
என்று என்னை நானே குழப்பிக்கொள்கிறேன்
போதாத நேரம்
போக போக குறைகிறது

போக விரும்பிய வாசல்கள் மூடி கிடக்கிறது
போக விரும்பாத பாதைகள் வரவேற்கிறது

போக போக இன்னும் என்னென்ன நடக்குமோ
நடக்கவிருக்கும் நேரங்களை
நடக்காமல் நிறுத்த முடியுமோ

போய்தான் பார்ப்போம் வியப்புடன்
புதிராக போக வேண்டிய நேரங்கள்
முன்னால் காத்து நிற்கிறது

உங்களைபோல் நானும் ஒருநாள்
நேரம் வந்ததும்
போக தான் போகிறேன்

அதுவரை நிற்காமல் போய் கொண்டே
இருப்பேன்


Saturday, September 24, 2016

பொய்மலரே

மலரே மலரே பொய்மலரே
அழகோ அழகு கொள்ளையழகு
மணமோ மணம் மனம் மயக்கும் மணம்
குணமோ குணம் குறிஞ்சி குணம்
பவமோ பவம் பவ்விய பவம்
சுகமோ சுகம் சூழ்ச்சி சுகம்
சாபமோ சாபம் சத்திய சாபம்

பாவமோ பாவம் கொண்டவன் பாவம்


Saturday, September 17, 2016

தயக்கம் ஏன்

திறந்த கதவுகள் என்றும் மூடபடுவதில்லை
தயக்கத்தை துறந்து
மெல்ல முன்னே நகர்ந்து
உள்ளே நுழைந்தால்
விருந்துகள் காத்துகிடக்கிறது,
உண்டு மகிழ்ந்து
மார்போடு தலைசாய்த்து உறங்கலாம்.



Thursday, September 8, 2016

விறுகொண்டு எழு

விறுகொண்டு எழு
விடியலை தொடு

வானம் உனதே
வையகமும் உனதே

உறங்காதே மனமே

காலம் நமக்காய் காத்திறாது
கனியுமென்றால் கிடைத்திறாது

எதுவும் தடையில்லை
தடைகளுக்கு இங்கே இடமுமில்லை

உண்மை வலியில்லை
பொய்களுக்கு இங்கே வழியுமில்லை

உறங்காதே மனமே


Wednesday, August 31, 2016

பொல்லாத பெண்ணே

(இந்த பதிவு எனது மறு ஆய்வுக்கு உட்பட்டது)

பொல்லாத பெண்ணே
உனக்கு என் முகம் தெரியாதா
உன்னை நான் காதலிப்பது
புரியாதா

கையோடு கைகோர்க்க
விம்புகிறேன்
என்பதை அறிந்தும்
காதலுக்கு
கைவிளங்கு புட்டுகிறாய்

தனியே தன்னந்தனியே
நிற்கின்றேன்
உன்பக்கம் வர தவிக்கிறேன்
தனியே
உன் சமிக்கைகளை காட்டு
வருகிறேன்
அன்பே
உன் அசைவுகள்
இனிதே
நம் காதலும்
இனிதே

செல்லக் குட்டி

தானே தன்னனனா தனே தனனா தானே நன்னா
வாடி செல்லக் குட்டி
சும்மா வருவேன்
உன்ன சுத்தி
தானே தன்னனனா தனே தனனா தானே நன்னா


to be continued

Monday, August 22, 2016

ஏய் ஜிகினா ஜாக்கெட்டு

என்னை  காலம் துரத்த
நான் ஓட
ஒரு வளைவில் திரும்பியபோது
என் மார்பிலே மோதியது
ஒரு
ஜிகினா ஜாக்கெட்டு
அவள் கிழே விழாமல் இருக்க
இறுக்கி அனைத்து கொண்டேன்
பிறகு விட்டுவிட்டேன்
ஆனால் அவள் வாய் விடவில்லை
போடா நாய்யே பண்ணி
கண்ணு தெரியல
பொறுக்கி
என்றது

மன்னித்து விடு
என்றேன் மூச்சி இறைக்க
அவள் மார்பை அனைத்து
கிழே குத்த உட்கார்ந்தாள்
சுற்றும் முற்றும் பார்த்தேன்
யாரும் உதவிக்கு இல்லை
நானே தோளை பிடித்து தூக்கினேன்
என் கையை உதறி விட்டு எழுந்தாள்
என்னை முறைத்து பார்த்தாள்
நான் தலை நாணி
என் மீது மோதிய அவள் மார்பை பார்த்தேன்
அது நலம்தான் என்று புரிந்தது...
அவள் முகம் கூட சரியாக பார்க்கவில்லை
அவளை கடந்து
என் ஓட்டத்தை தொடர்ந்தேன்

ஏய் ஏய் என்று
என் பின்னால்
அவள் கத்தும் சப்தம்
மாட்டும் கேட்டுகொண்டே இருந்தது
மீண்டும் திரும்பி
அவளை
பார்க்கவே இல்லை





உலகானவள்

துருக்கி தெருக்களில் என்னை  துரத்தியவள்
டோக்கியோ செர்ரி மரங்களின் கீழ் தோள்களில் சாய்ந்தவள்
பாரிஸ் சதுக்கத்தில் இதழ் பதித்தவள்
அல்ப்ஸ் மலை காற்றோடு சுவிச்சர்லாந்தில் என்னோடு இணைந்தவள்
ஆங்கில கால்வாயை எனக்காக நூறு முறை கடந்தவள்
சோமாலியாவின் வறுமையை கண்டு என்னிடம் புலம்பியவள்
எகிப்த்தின் மம்மிகளை சிலுவையிட்டு வணங்கியவள்
நார்வே இரவுகளில் வடக்கு திசையில் தோன்றும் அரோராக்களை கொடிட்டு ரசித்தவள்
லாஸ் வேகாஸ் கேளிக்கை விடுதிகளில் தூங்க விடாமல் செய்தவள்
(தற்போது)
இந்தியாவின் கூவத்தில் என்னை கரம் பிடிக்க விரும்புகிறாள்


Sunday, August 21, 2016

என்னை சுட்டுத்தள்ளு

எனக்கான தோட்டா
உங்கள்  துப்பாக்கிகளில்
லோட் செய்யப்பட்டுள்ளது

அது என் நெற்றிபொட்டிற்க்கா
அல்லது  என் இதயாத்துக்கா
என்பது
ட்ரிகரை அழுத்தும் கை விரலுக்கும்
குறிப்பார்க்கும் கண்களுக்கும் தான்  தெரியும்

நான் ஏற்கனவே பார்த்து  பழகிய
கண்களும்
நான் ஆற தழுவிய கைகளும்
தான்
என்னை இன்று
 சுடுகிறது



Sunday, August 14, 2016

சொற்களை விற்ப்பவன்

என் இதயம் என்ன இருட்டறையா ?
அணையா விளக்கை ஏற்றுகின்றேன்

என் செவிகள் கேளாத ஒலிஅழி கூடமா ?
இசைகள் இசைத்து பாடல்கள் படிக்கின்றேன்

என் கண்கள் ஒழுக்கமற்ற குருட்டுப்பார்வையா ?
பிறர் வாழ்வில் ஒளிவிசும் ஒளி மரங்களை நடுகிறேன்

நான் அநியாயங்களை தட்டி கேட்காத மவுனியா ?
வசை வீசும் சொற்களை வாய்ஜாலத்தால் திசை மாற்றி விடுகிறேன்

கேலி சிரிப்புகளை உள்வாங்கி கொள்கிறாள்
அழுகிறேன் நெகிழ்கிறேன் புகழ்கிறேன் மகிழ்கிறேன்

வாழ்வில்
உள்ள வலிகளை 
உள்ளே சுமந்து 
வெளியே
அவரவர் தேவைகேற்ப்ப
விலையில்லா
சொற்களை
இலவசமாய்
விற்கிறேன்           (விநியோகிக்கிறேன்)

கவிதையாக 


Friday, August 12, 2016

தனியே பேச வந்தேன்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

அதை சொல்லத்தான், நெஞ்சினில் நூறு ஆசைகள்
அதை சொல்லாத போது உள்ளே நெஞ்சம் நொறுங்கி விழும் ஓசைகள்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

ஓர் நதியே என் தாகம் தீர்த்திடாத போது
ஓர் குவளை நீர் அதை செய்திடுமோ

நீங்காத எண்ணங்கள் நெடு நாட்கள் உண்டு
மகரந்தம் மனம் வீசிட அதை நெருங்காதோ
மலர் மொக்கும் வண்டு

தீராத ஆசைகள் எனக்கென்றும் உண்டு
நீ வந்து தட்டினால் திறக்காதோ எந்தன் கதவு

நெடுதூரம் பயணித்து வந்தேனம்மா
உனக்காக காத்து நிற்கும் ஓர் பாடல் நான்.



Wednesday, August 3, 2016

காதல் கோள்கள்

செழிப்பான பூமிக்கோ நிலவின் மீது காதல்
வறண்ட  நிலவுக்கும் பூமியின் மீது காதல்

இடையே ஆகாய இடைவெளி தடை போட்டாலும்
இரவில் நிலவு காதலை ஒளியால் ஒளிர்விடுகிறது

அதை தினம்தோறும் ரசிக்கும் பூமி
கவிதைகளாய் சொல்லி நிலவை புகழ்கிறது..

தொலைவிலிருந்து இதை கவனிக்கும் சூரியனுக்கோ
வயட்றேரிச்சல்
பகலில் வெப்பத்தால் இருவரையும் சுட்டெரிக்கிறது

பகலிலே பயந்து மறைந்து தொலைந்த நிலவு
மீண்டும் இரவில் தோன்றி உனக்காக நான் இருக்கிறேன் என்பதை பக்குவமாய்
பூமிக்கு மென் ஒளியால் வெளிபடுத்துகிறது


மிகவும் பிடிக்கும்

விடிந்த பிறகும் முடியாத கனவுகள்
துரத்திவரும் நினைவலைகள்
தூக்கத்தை துலைத்த இரவுகள்
எல்லாம் என்னை பிடித்துகொண்டது
என்னை மிகவும் பிடிக்கும் என்று
காற்றோடு அவள் காதலை (தமிழில்) பதிவு செய்திட்ட பிறகு.. :)



Friday, July 29, 2016

அன்பிலே

ஓடம்  அது  ஓடும்
நதியின் போக்கினிலே
துடுப்பின்  தொடுப்பிலே  திசை  மாறும்
அன்பிலே
உனதன்பிலே


நம் குப்பைகள்

நாம் நமக்குள் இருக்கும் குப்பையை  தூக்கி போட்ட  பிறகு
அதை  யார் மீண்டும் எடுக்கிறார்கள் (எடுப்பார்கள்)  என்று  கவலை  படக்கூடாது
கண்காணிக்க  தொடங்கினால்
கவலை  எனும் குப்பை
நமக்குள் குடி ஏறும்




கடந்து செல்வோம்

முழு நிறையாக இருந்தாலும்
சிறு குறை காண ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
நம் நிம்மதி பெருமூச்சை நிறுத்த பார்க்கிறது
அதை (அதன்மேல்) நீந்தி கடந்து செல்வோம்


Thursday, July 28, 2016

வன்மம் உடைத்தேன்

நான் நிறைவானவன் இல்லை என்பது எனக்கு தெரியும்
ஆனால்
உன்னைவிட குறைவானவன் இல்லை என்பதை
உனக்கு முதலில் புரிய வைத்து விடுவேன்.
நியாயம் என்றால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்.
இல்லை என்றால்
நான் அடக்கி வைத்துள்ள வன்மத்தை கட்டவிழ்த்துவிட்டு
நீ வீழும் வரை
வேடிக்கை பார்ப்பேன்